ஆயுதப் படையில் மூத்த பதவிகளை வகிக்க அதிகாரிகளைத் தயார் செய்யும் கல்லூரியில் பட்டம் பெற்றவர்

Spread the love

கோ கெங் சுவீ (Goh Keng Swee) தளபத்திய, அதிகாரிகள் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆக அதிகமாக நேற்று 237 அதிகாரிகள் பட்டங்களைப் பெற்றனர்.

அவர்களில் ஒருவர், ராணுவ வல்லுநர் 5 ராகவன் ராமசந்திரன்.

தாம் கற்றுக்கொண்ட அம்சங்களை வைத்துப் பெரிய அளவிலான தரவுகளைச் சுலபமாகவும் எளிதாகவும் பகுப்பாய்வு செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கிருமித்தொற்றுச் சூழலுக்குப் பிந்திய உலகில் நேரடியாகவும் இணையம் வழியாகவும் வேலை செய்யும் நடைமுறைக்கு ராணுவமும் தற்காப்பு அமைப்புகளும் பழகிக்கொள்ள வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறினார்

இணைய அச்சுறுத்தல், உயிரியல் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிரான ஆற்றலையும் ராணுவங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கோ கெங் சுவீ தளபத்திய, அதிகாரிகள் கல்லூரி, பொதுவாகச், சிங்கப்பூர் ஆயுதப் படையில் மூத்த பதவிகளை வகிக்க அதிகாரிகளைத் தயார் செய்கிறது.

மேலும் அறிந்தது, ‘செய்தி’.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: