ஆப்கானிஸ்தானுக்கு புதிய கேப்டன்: முகமது நபி நியமனம்

Spread the love

காபூல்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளார்.

எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ‘சுழல்’ வீரர் ரஷித் கான் 22, நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணித் தேர்வு குறித்து தன்னிடம் ஆலோசிக்காததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷித் கான்.

இதனையடுத்து இத்தொடருக்கு கேப்டனாக ‘ஆல்–ரவுண்டர்’ முகமது நபியை 36, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு (ஏ.சி.பி.,) அறிவித்துள்ளது. இதுகுறித்து முகமது நபி கூறுகையில், ‘‘அடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு பெருமை தேடித்தருவோம்,’’ என்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: