ஆப்கனில் நிரந்தர அமைதி இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

Spread the love


துஷான்பே:”ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமென்றால், உள்நாட்டிலும், சுற்றுப் பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்துவது அவசியம்,” என, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான, ஆசிய – இஸ்தான்புல் செயலாக்க அமைச்சரவை மாநாடு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த, தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேயில் நடந்தது.

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஆப்கனில் நீடித்த, ஸ்திரமான அமைதி நிலவ வேண்டும். அதற்கு உண்மையான இரட்டை அமைதி நிலைப்பாடு அவசியம். ஆப்கன் – தலிபான் அமைதிப் பேச்சு வெற்றி பெற்ற பின், இரு தரப்பும் முழு நம்பிக்கையுடன், அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இறங்க வேண்டும்.

ஆப்கனில் அமைதியற்ற சூழல் நிலவினால், அது ஆசிய பிராந்தியத்தையும் பாதிக்கும். பயங்கரவாதம், வன்முறை, போதை மருந்து மற்றும் கிரிமினல் கும்பல்கள் இல்லாத ஆப்கனை உருவாக்க வேண்டும். ஆப்கன் அமைதி நடவடிக்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.ஆனால், ஆப்கனில் அன்னிய போராளிகளின் ஆதிக்கம் தொடர்வது இடையூறாக உள்ளது. அதனால், ஆப்கனில் உடனடியாக வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி, நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, உறுப்பு நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: