ஆன்டர்ஸனின் அசாத்தியம்; 70 ஆண்டுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வயதான வேகப்பந்துவீச்சாளர் | James Anderson, the oldest pacer with a Test five-for in 70 years

Spread the love

செய்திப்பிரிவு

Published : 14 Aug 2021 10:05 am

Updated : 14 Aug 2021 10:05 am

 

Published : 14 Aug 2021 10:05 AM
Last Updated : 14 Aug 2021 10:05 AM

james-anderson-the-oldest-pacer-with-a-test-five-for-in-70-years
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் | கோப்புப்படம்

லண்டன்


லண்டனில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் 31-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஆன்டர்ஸன் 31-வது முறையாக வீழ்த்தி அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.

  • கடந்த 1951-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகஅதிகமான வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்டர்ஸன் தனது 39வது வயது 14 நாட்களில் இந்த சாதனையைச் செய்தார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹாட்லி 39வயதில் இந்த சாதனையைச் செய்திருந்தார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவின் பெர்ட் அயன்மாங்கர் தனது 49வயது 313 நாட்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1932-ம் ஆண்டில் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல் இருஇன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.
  • இ்ங்கிலாந்து அணியில் டெஸ்ட் போட்டியில் அதிகமான வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன். இதற்கு முன் 1990-ம் ஆண்டு பிர்மிங்ஹாமில் நியூஸிலாந்துக்கு எதிராக எடி ஹெம்மிங்ஸ் தனது 41-வது வயதில் 5 விக்ெகட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
  • லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 5 முறை இங்கிலாந்து அணியில் ஆன்டர்ஸன் களமிறங்கியுள்ளார். இந்த 5 போட்டிகளில் 4 முறை 5 விக்கெட்டுகளை ஆன்டர்ஸன் வீழ்த்தியுள்ளார். ஒரே மைதானத்தில்இந்திய அணிக்கு எதிராக அதிகமான முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்ஆன்டர்ஸன் மட்டும்தான். இதற்கு முன் இங்கிலாந்து பந்துவீச்சாளர் சிட்னி பேரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எம்சிஜி மைதானத்தில் 4 முறைக்கும் அதிகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆன்டர்ஸன் 31-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட்டுகளை அதிகளவு வீழ்த்தியதில் உலகளவில் –6-வது பந்துவீச்சாளராகவும் ஆன்டர்ஸன் விளங்குகிறார்.
  • லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 7 முறை 5 விக்கெட்டுகளை ஆன்டர்ஸன் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் போத்தம் 8 முறை லார்ட்ஸ் மைதானத்தில் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பு சிங்களா விளையாட்டு மைதானத்தில் மட்டும் 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாகும்.
  • டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அதிகபட்சமாக ஆன்டர்ஸனுக்கு 30 ஓவர்கள் வரை தேவைப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 29 ஓவர்கள் வீசியபின்புதான் ஆன்டர்ஸனால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

தவறவிடாதீர்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: