ஆண்களுக்கு நிகரான சம்பளம் – மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய தேசிய மகளிர் காற்பந்துக் குழு

Spread the love


Images

  • Aus

    படம்: REUTERS

ஆஸ்திரேலிய தேசிய மகளிர் காற்பந்து அணி வீராங்கனைகளுக்கு, அந்நாட்டின் ஆண்கள் அணி வீரர்களைப் போன்றே சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.

விளையாட்டில் பாலினச் சமத்துவத்தைப் பேணும் வகையில் அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் அணியின் மிகச் சிறந்த வீராங்கனையரான, சாம் கெர் (Sam Kerr), எல்லி கார்பெண்டர் (Ellie Carpenter) ஆகியோர் ஆண்கள் அணியின் ஆரன் மூய் (Aaron Mooy), மேட் ரயான் (Mat Ryan) ஆகியோருக்கு நிகரான சம்பளத்தைப் பெறுவர்.

அனைத்துலகக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் வீராங்கனைகள், வீரர்களைப் போன்றே விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்யமுடியும்.

ஆஸ்திரேலிய மகளிர் காற்பந்து அணியினருக்கான இந்த சமத்துவச் சம்பள வாய்ப்பு, அமெரிக்கப் பெண்கள் காற்பந்து அணியினருக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

அமெரிக்கத் தேசிய அணியின் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு நிகராகத் தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று அங்குள்ள பெண்கள் அணியினர் அமெரிக்கக் காற்பந்துச் சம்மேளனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு மே மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: