ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராக இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர்

Spread the love


இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ராஜா ரந்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மன்றத்தின் முன்னாள் தலைவர் ஷேக் அகமது அல் ஃபஹத் அல் சபா (Sheikh Ahmad al-Fahad al-Sabah) சிறைக்குச் சென்றதை அடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குவைத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அகமது, அரசியல் வைரிகளுக்கு எதிராக சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது.

அவருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் நீண்டகால உறுப்பினரான சிங் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.

அவர் 2015-ஆம் ஆண்டு வரை அனைத்துலக ஒலிம்பிக் குழுவில் செயல்பட்டார்.

2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா ஏற்றுநடத்தும் முடிவிலும் அவர் பங்களித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: