ஆகஸ்ட் மாதம் 4900 தேவைக்கேற்பக் கட்டிவிற்கப்படும் வீடுகள் விற்பனைக்கு வரும்

Spread the love


வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீடு இந்த ஆண்டின் முதல் காலாண்டில், காலாண்டு அடிப்படையில் சற்று அதிகரித்திருப்பது முன்னோடி மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

முதல் காலாண்டில் குறியீடு 142ஐ எட்டியது.

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அது 2.8 விழுக்காடு அதிகம்.

அடுத்த மாதம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புக்கிட் மேரா, கேலாங், தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் சுமார் 3,800 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், காலாங் வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ் ஆகிய பகுதிகளில், 4900 தேவைக்கேற்பக் கட்டிவிற்கப்படும் வீடுகள், விற்பனைக்கு வரும்.

COVID-19 நிலவரத்தால் பொருளியல் சூழல் நிச்சயமற்றதாக உள்ளது.

அதனால் சொத்துச் சந்தையைக் கழகம் அணுக்கமாகக் கவனித்துவரும் என்றும் நிலைமைக்கு ஏற்ப விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *