அவனி லெகாரா: `விபத்தில் முடங்கியது கால்கள்தான், மனம் அல்ல!’ – யார் இந்த 19 வயது தங்க மங்கை? | bio of avani lekhani who won gold medal in shooting in tokyo paralympics 2020

Spread the love


அவனி லெகாரா… இந்தப் பெயரைத்தான் இப்போது நம் தேசம் அதிகமாக உச்சரித்துக்கொண்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கும் தங்க மங்கை இவர். பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தமாக 249.6 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையோடு, உலக சாதனையையும் சமன் செய்திருக்கிறார் 19 வயதேயான அவனி லெகாரா.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்தான் அவனியின் சொந்த ஊர். அவருக்கு 9 வயது ஆகும்வரை மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்து அவரது வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.

அவனி லெகரா

அவனி லெகரா
Twitter

அந்த விபத்து காரணமாக அவருடைய முதுகுத் தண்டுவடத்தில் பலத்த அடிபட, அதன் பின்னர் நடக்க இயலாமல் முடங்கினார் அவனி. அதற்குப் பிறகு சக்கர நாற்காலியே அவரது உலகமாகியிருக்கிறது.

தன் மகள் இப்படியே முடங்கிப்போய்க் கிடப்பதை அவனியின் தந்தை விரும்பவில்லை. “உனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணப்படு” என்று தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். குறிப்பாக, ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அவர் சொல்ல, வில்வித்தை உட்பட பல விளையாட்டுகளில் கவனம் செலுத்திப் பார்த்திருக்கிறார் அவனி. ஆனால் அது எதுவும் இவரது மனதைத் தொடவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பு அவனிக்குக் கிடைத்திருக்கிறது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: