அளவுக்கு மீறிய மதுபானம் – ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் பேர் பலி; பெரும்பாலும் ஆண்கள்: உலக சுகாதார நிறுவனம்

Spread the loveஅளவுக்கு மீறிய மதுபானம் அருந்துவதால் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் 2016-ஆம் ஆண்டில் இறந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் 20 இறப்புகளில் ஒன்று, அளவுக்கு மீறிய மதுபானத்துடன் தொடர்புடையது.

அதிக அளவு மதுபானம் உட்கொள்வதால் விளையும் மரணங்களில் நான்கில் மூவர் ஆண்கள் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அளவுக்கு மீறிய மதுபானம் உட்கொள்வதால் சுகாதாரக் கேடுகள் விளைவதற்குச் சான்றுகள் இருந்தாலும், அது அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மதுபானம் அதிகமாக உட்கொண்டு தங்களுக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை உலக அளவில் 237 மில்லியன். பெண்களுக்கான அதே எண்ணிக்கை, 46 மில்லியன்.

இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு தனி நபரும் உட்கொள்ளும் மதுபானத்தின் அளவு தென்கிழக்கு ஆசியாவிலும், மேற்கு பசிஃபிக்கிலும், அமெரிக்காவிலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

அளவுக்கு மீறிய மதுபானம் உட்கொள்வதனால் ஏற்படும் சமுதாய, சுகாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கு அனைத்து நாடுகளும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *