அரையிறுதியில் லேலா, சபலென்கா: யு.எஸ்., ஓபனில் அபாரம் | செப்டம்பர் 08, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இளம் வீராங்கனை கனடாவின் லேலா பெர்ணான்டஸ் முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள கனடாவின் லேலா பெர்ணான்டஸ், உலகின் ‘நம்பர்–5’ உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். மூன்றாவது, 4வது சுற்றில் முறையே ‘நடப்பு சாம்பியன்’ ஜப்பானின் ஒசாகா, ஜெர்மனியின் கெர்பரை வீழ்த்தி அதிர்ச்சி தந்த 19 வயது இளம் வீராங்கனை லேலா, 6–3, 3–6, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு (2005, 18 வயது) பின், யு.எஸ்., ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீராங்கனையானார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: