அரச குடும்பக் கடமைகளை மீண்டும் ஏற்கப்போவதில்லை: ஹேரி, மேகன்

Spread the loveபிரிட்டிஷ் இளவரசர் ஹேரியும் அவரின் மனைவி மேகனும் அரச குடும்பக் கடமைகளை மீண்டும் ஏற்கப்போவதில்லை என்பதை பக்கிங்ஹம் அரண்மனை (Buckingham Palace) உறுதிசெய்துள்ளது.

அது குறித்து இரண்டாம் எலிஸபெத் அரசியார் ஹேரியுடன் பேசியதாக அரண்மனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அரச குடும்பத்து உறுப்பினர்களின் பணிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், அவற்றுடன் சேர்ந்துவரும் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடரமுடியாது என்பது அப்போது உறுதியானதாகவும் அது குறிப்பிட்டது.

ராணுவத்தில் தமக்குள்ள கௌரவப் பொறுப்புகளையும் ஹேரி துறக்கவுள்ளார்.

பொறுப்புகள் தற்போதைக்கு அரசியாருக்கு மீண்டும் செல்லும் என்று கூறப்பட்டது.

ஹேரியும் மேகனும் தங்கள் அரச வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க முடிவுசெய்ததாகக் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

அவர்களின் முடிவு வருத்தம் அளித்தாலும், இருவரும் தொடர்ந்து அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக நிலைத்திருப்பார்கள் என்று பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்தது. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *