அரசதந்திரத்தின் அடுத்த அத்தியாயம் தொடக்கம்: அதிபர் பைடன்

Spread the love


Images

  • biden un

    (படம்: AFP)

அமெரிக்கா அதன் ஆக நீண்ட போரை முடித்த பிறகு, அரசதந்திரத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கப்போவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் பல திட்டவட்டமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளதாக அவர் சொன்னார்.

கிருமித்தொற்றுச் சூழல், பருவநிலை மாற்றம், இணையத் தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள அந்தக் காலக்கட்டத்தில் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய முதல் உரையில் திரு. பைடன் அவ்வாறு கூறினார்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, முன்னர் கூறியதைவிட ஒரு மடங்கிற்கும் மேல் அதிகமாக நிதியுதவி வழங்க அவர் உறுதியளித்தார்.

உலக அளவில் பசி-பட்டினியைப் போக்க 10 பில்லியன் டாலர் செலவிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீனா அல்லது பெய்ச்சிங் என்ற வார்த்தைகளைத் திரு. பைடன் தமது உரையில் பயன்படுத்தவில்லை.

ஆனால் மற்றொரு கெடுபிடிப் போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

பலவீனமான நாடுகளைக் கட்டுபடுத்த முயற்சி செய்யும் பெரிய நாடுகளை எதிர்க்கவும் தேவைப்பட்டால் படைபலத்தைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயாராக இருக்கும் என்றார் அதிபர் பைடன்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: