அம்னோ கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் பணியாற்றுவார்கள் – மலேசியப் பிரதமர்

Spread the love


மலேசியாவில் அம்னோ கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தமது அமைச்சரவையில் பணியாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியிருக்கிறார்.

Perikatan Nasional கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை அம்னோ எந்நேரமும் மீட்டுக்கொள்ளலாம் என்றும், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவி விலகலாம் என்றும் கட்சித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி (Zahid Hamidi) கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் முஹிதீன் அந்த இணக்கம் பற்றி தெரிவித்தார்.

நாட்டு நலன், நாட்டு மக்களின் நலன் கருதி, அவர்களை அமைச்சரவையில் தொடர்ந்து சேவையாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

தற்போது, கோவிட்-19 கிருமிப்பரவலைக் கையாள்வது, தேசிய அளவில் தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்துவது, நாட்டின் பொருளியலை மீட்பது ஆகியன அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்றார் அவர்.

அந்த முன்னுரிமைகளைக் கையாளும் பொறுப்புகளை அம்னோ கட்சியைச் சேர்ந்த சிலர் கொண்டுள்ளனர்.

இந்தத் தருணத்தில் அவர்களின் பதவி விலகல் அரசாங்கத்தின் திட்டங்களைப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படக்கூடாது என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *