அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் உள்ள பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாண்ட காவல்துறை அதிகாரி, 7 பிள்ளைகளுக்குத் தந்தை என்று தெரியவந்துள்ளது.
குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக, முன்னிலையில் இருக்க வேண்டிய தேவையில்லாத வேறு வேலையை அவர் தேடிக் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தபோது, 51 வயது ஏரிக் டேலி (Eric Talley) சம்பவ இடத்திற்கு சென்ற முதல் அதிகாரி என்று கூறப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த அவரை, ‘நாயகன்’ என்று காவல்துறை வருணித்தது.
தம் பிள்ளைகளை உயிராய் நேசித்த டேலி, அனைவரையும் ஒரே வாகனத்தில் அழைத்துச் செல்வதற்காகப் 15 பேர் அமரக்கூடிய சிறு வேனை வாங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டது.
டேலியின் பிள்ளைகளில் ஆக இளையவருக்கு 7 வயது.
பிள்ளைகள் இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதை அவர் சற்றும் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
வடிகாலில் சிக்கியிருந்த வாத்துகளைக் காப்பாற்றியதற்காக ஒருமுறை அவர் செய்தியில் வந்தார்.
டேலி ஆற்றிய சேவை எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
அவர் உள்பட குறைந்தது 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.
அதன் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.