அமெரிக்கா: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச டோனட் வழங்கவிருக்கும் Krispy Kreme

Spread the love


COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச டோனட் (doughnut) வழங்கவுள்ளது Krispy Kreme.

CNN செய்தி நிறுவனம் அதுபற்றி செய்தி வெளியிட்டது.

தடுப்பூசி போட்டதற்கான அடையாள அட்டையை அமெரிக்காவில் உள்ள Krispy Kreme கடைகளுக்கு எடுத்துச் சென்றால்,திங்கட்கிழமையிலிருந்து இவ்வாண்டு இறுதிவரை ஒவ்வொரு நாளும் ஒரு டோனட் இலவசமாகப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியைப் பெருக்கும் “Be Sweet” என்ற முயற்சியின் ஓர் அங்கமாக அது அமையும்.

இலவச டோனட் பெற, COVID-19 தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டைப் போட்டுக்கொண்ட அடையாள அட்டையைக் காட்டினால் போதும், வேறு எதுவும் வாங்கத் தேவையில்லை.

நோய்ப்பரவலைச் சீக்கிரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் தடுப்பூசி போடுவதன் மூலம் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்போரை ஆதரிப்பதாகவும் நிறுவன அதிகாரி Dave Skena கூறினார்.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்பதை மதிப்பதாக நிறுவனம் சொன்னது.

மார்ச் 29 இலிருந்து மே 24 வரை, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும் காப்பியும் வழங்கப்படும் என்று CNN செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *