அமெரிக்கா, சீனாவின் ஒலிம்பிக் ஆதிக்கத்துக்குக் காரணம் பெண்கள்… இந்தியா தவறவிடுவது அங்குதான்! | Teams that focus more on female athletes are performing well in Olympics

Spread the love

ஜிம்னாஸ்டிக்ஸை எடுத்துக்கொண்டாலும் இதே கதைதான். கிரீஸ், ஆர்மீனியா போன்ற அணிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஒரேயொரு ஆணை அனுப்பி ஒரு பதக்கம் வென்றன. ஆனால், அந்த நாடுகள் சார்பில் பெண்கள் வரவே இல்லை. 4 ஆண்கள், 1 பெண் சென்ற துருக்கி அணியில், ஆடவர் பிரிவில் 1 வெண்கலம் கிடைத்தது. அதேசமயம், சீனா 8 ஆண்களையும், 13 பெண்களையும் அனுப்பியிருந்தது. அமெரிக்கா சார்பில் 6 ஆண்களும் 14 பெண்களும் பங்கேற்றனர். இங்குதான் கிரீஸ், துருக்கி போன்ற நாடுகள் சறுக்குகின்றன.

China dominates in Gymnastics

China dominates in Gymnastics
AP

மற்ற நாடுகளிலெல்லாம் ஒரு விளையாட்டில் ஆண்கள் பிரிவில் வெற்றியடைந்தால்தான், பெண்கள் பக்கமும் அந்த சங்கங்களின் பார்வை நகரும். அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளில் அப்படியில்லை. பெண்கள் பிரிவில் மற்ற நாடுகள் ஈடுபாடு காட்டாததால், அந்தப் பிரிவில் இந்தப் பெரிய நாடுகள் நன்றாக தங்களைப் பலப்படுத்திக்கொண்டன. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தங்கள் குழுவில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: