அமெரிக்காவில் பள்ளித் தலைமையாசிரியர் பதவி விலகல், கறுப்பின மாணவரிடம் நடந்துகொண்ட விதத்தால்…

Spread the love

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளா பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர், கறுப்பின மாணவரை முறையாக நடத்தத் தவறியதற்காகப் பணியிலிருந்து விலகியுள்ளார்.

அந்த 11 வயது மாணவர்,ஆங்கில இலக்கிய வகுப்பில் வேறு பாடத்தைச் செய்துகொண்டிருந்தார்.

அதைக் கண்ட அவரது ஆசிரியர் பாடத்தை எடுத்துக் கிழித்துப் போட்டுவிட்டு அவரைத் தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பினார்.

தலைமையாசிரியர், மாணவரை, “ஆப்பிரிக்க” வழியில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும்படி கூறினார்.

சம்பவம் சென்ற வாரம் நடந்தது.

வார இறுதியில், அந்த 11 வயது மாணவரின் தாயார் நடந்ததைப் பற்றி உள்நாட்டுச் செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்தார்.

New York Daily News இதழில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது. நேற்று (24 மார்ச்), பாதிக்கப்பட்ட மாணவரின் பள்ளியான St. Martin de Porres பள்ளி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் தலைமையாசிரியர் வேலையிலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. நடந்த சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க உறுதியும் கூறியது, அந்தப் பள்ளி.

பிறருக்கு மதிப்பளித்து, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அப்பள்ளியின் நீண்ட கால நற்பெயரை அச்சம்பவம் பிரதிநிதிக்கவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர் மிக அமைதியாகிவிட்டதாக அவரது தாய் குறிப்பிட்டார். அவர் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடி பள்ளிப் பாடங்களைக் கற்று வருகிறார்.

அச்சம்பவத்தால் மனத்தளவில் அடைந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர அவர் முயற்சி செய்வதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *