அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து முகாமை நடத்தி வரும் “பியூட்டி பார்லர்” | A Barber and Beauty Saloon in America s Wisconsin state host COVID19 Vaccination drive | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


A-Barber-and-Beauty-Saloon-in-America-s-Wisconsin-state-host-COVID19-Vaccination-drive

உலகையே தனது கோர பிடியினால் ஆட்டி படைத்து வருகிறது கொரோனா தொற்று. தற்போது உலக நாடுகள் இந்த தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள சலூன் கடை ஒன்று சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு மருந்து முகாமை ஒருங்கிணைத்து வருகிறது. 

அங்கு அமைந்துள்ள Gee’s Clippers Barber and Beauty சலூனில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

image

“கொரோனா தடுப்பூசியானது உடலில்  எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பாக வளர்க்க உதவுகிறது. இது நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அவற்றின் சிக்கல்களால் பாதிக்கப்படுவதையும் குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் சுற்றத்தார் அனைவரையும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளலாம். அதனை கருத்தில் கொண்டு மார்ச்சி 27 முதல் ஏப்ரல் 17 வரையில் பிரதி சனிக்கிழமை தோறும் எங்கள் சலூனில் கொரோனா தடுப்பு மருந்து முகாமை ஒருங்கிணைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளது அந்த சலூன் கடை நிர்வாகம். THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *