அன்கிதா தோல்வி

Spread the love


லாண்டிஸ்வில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை அன்கிதா தோல்வியடைந்தார்.

அமெரிக்காவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, போலந்தின் காவா கடர்ஜினா மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த அன்கிதா, பின் எழுச்சி கண்டு ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டை 7–6 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர், 4–6 எனக் கோட்டைவிட்டார்.

முடிவில் அன்கிதா 3–6, 7–6, 4–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, மெக்சிகோவின் ரெனாடா ஜராசுவா ஜோடி விலகியதால் சீனதைபேயின் யு–சி ஹசிக், சி–யு ஹசு ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: