அதிபர் ஹலிமா, பிரதமர் லீ, லாவோஸ் தலைவர்களின் பதவியேற்புக்கு வாழ்த்து

Spread the love


அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் இருவரும் லாவோஸ் அதிபர் தொங்லொன் சிசோலித் (Thongloun Sisoulith), பிரதமர் டாக்டர் பங்கம் விபவன் (Phankham Viphavanh) ஆகிய இருவரின் பதவியேற்புக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 22ஆம் தேதி, திரு. தொங்லொன் சிசோலித்தும் டாக்டர் பங்கம் விபவனும் லாவோஸின் 9வது நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிபர் ஹலிமா, தமது கடிதத்தில் திரு. தொங்லொன் சிசோலித்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூருக்கும் லாவோஸுக்கும் இடையே சிறப்பான உறவும் ஒத்துழைப்பும் இருப்பதாக அவர் கூறினார்.

திரு. தொங்லொன் சிசோலித்தின் தலைமையின் கீழ், லாவோஸ் புதிய உச்சங்களை அடையும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் பங்கம் விபவனுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் லீ, இரு நாடுகளுக்கு இடையில் நீடித்த நட்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

லாவோஸின் சமுதாய-பொருளியல் வளர்ச்சி இலக்குகளுக்குச் சிங்கப்பூர் ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், சிங்கப்பூருக்கு வருகை அளிக்குமாறு டாக்டர் பங்கம் விபவனைத் திரு. லீ கேட்டுக்கொண்டார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *