அதிகமாகப் பயன்படுத்தப்படும் Emoji சின்னங்கள் யாவை?

Spread the loveImages

  • Emoji

    (படம்: Pixabay)

ஒரு காலத்தில் கருத்துகளையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்குச் சொற்களையே மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினர்.

ஆனால் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், Emoji சின்னங்களின் செல்வாக்கு ஓங்கியுள்ளது.

பல மொழி பேசும் மக்களிடத்தில் உணர்வுகளைச் சுலபமாகப் பதிவுசெய்ய Emoji சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முக பாவனைகள், உணவுவகைகள், உணர்ச்சிகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பிரதிநிதிக்கும் Emoji சின்னங்கள் கருத்துப் பரிமாற்றத்தில் கால்பதித்து வருகின்றன.

அதில் கண்ணீர்வரச் சிரிக்கும் பாவனை கொண்ட முகம் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படும் Emoji சின்னம்.

பதிவுசெய்யப்பட்டுள்ள Emoji சின்னங்களில் 9.9 விழுக்காடு அந்தச் சிரிக்கும் பாவனை கொண்ட முகமாக உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில், அன்பைக் குறிக்கும் இதய வடிவம் உள்ளது.

அந்தத் தகவலை Unicode Consortium எனும் அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *