அடுத்த ஆண்டு இதே நாள் ஒலிம்பிக்… தயாராகிறது தோக்கியோ

Spread the love


Images

  • Sport

2020 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஓராண்டு உள்ள நிலையில் ஜப்பான் தனது ஆயத்தப்பணிகளின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்த ஆண்டு இன்றைய தினத்தில் (ஜூலை 24) போட்டிகள் தொடங்குவது திட்டம்.

போட்டிகள் புதிய தோக்கியோ உருவாக வழிவிடும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

ஜப்பான் ஒரு தொழில்நுட்ப மையம் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒலிம்பிக் போட்டிகள் பொருத்தமான தளம் என்கின்றனர் அவர்கள்.

போட்டியில் ஓட்டுநரில்லா வாகனங்களும் வரவேற்று உபசரிக்கும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும்.

80,000 தொண்டூழியர்களுக்கான இடங்களுக்கு 200,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நுழைவுச் சீட்டுகளின் விற்பனையும் எதிர்பார்ப்பை விஞ்சியுள்ளது.

போட்டிகள் நடைபெறும் அரங்குகளில் பாதி கட்டப்பட்டுவிட்டதாகவும் எஞ்சிய கட்டுமானப் பணிகள் சீராகச் செல்வதாகவும் கூறப்பட்டது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *