அக்டோபர் முதல் டிசம்பர் வரை 1.3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியுள்ள Facebook

Spread the love


அக்டோபர் முதல் டிசம்பர் வரை 1.3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் தளத்தில் தவறான தகவல்களைக் கையாள்வதில் 35,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக நிறுவனம் நேற்று முன்தினம் (மார்ச் 22) கூறியது.

COVID-19, தடுப்பூசிகள் ஆகியவை பற்றிய பதிவுகளில் தவறான தகவல் என அனைத்துலகச் சுகாதார வல்லுநர்களால் வகைப்படுத்தப்பட்ட 12 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை அகற்றியுள்ளதாக Facebook அதன் இணையப் பதிவில் தெரிவித்தது.

கொரோனா கிருமித்தொற்றுக் காலத்தில், தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்கள் Facebook, Twitter உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *